திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள சிறிய கிராமம் குன்னம்பட்டி, அங்கே வசிக்கும் ஜெயராமன் குடும்பம்தான் ஊரில் உள்ள அனைவரையும் சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
தனது அரசியல் செல்வாக்கினால் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை முன்வைத்து ஒரு  ஊரையே விசாரணை கூட இல்லமால் காவல்துறையில்  சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயராமன், மனைவி காளீஸ்வரி, அவர்களின் மகள்கள் வினோதினி, புவனேஸ்வரி, சித்ரா தேவி ஆகியோர் குன்னம்பட்டி என்ற ஊரில் வசித்து வந்தனர். இதில்  தனது மகள் வினோதினியை இரண்டு மாதங்களுக்கு முன்பு தான்  திருமணம் செய்து வைத்துள்ளனர்.  இந்த நிலையில் ஊரில் அவர்கள் யாருடனும் பேசுவதில்லை, ஏனென்றால் அவர்களின் எண்ணம் மிகவும் கொடூரமானது. 
இந்த நிலையினால் ஊர் மக்கள் யாவரும் அவர்களின் நிலைத்திருக்க வேலைக்கு செல்வதில்லை, இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஊர் மக்களின் மீது தீராத கோவம் அடைந்தனர். இந்த நிலையில் தனது நிலைத்திர்க்கு அருகே அமைந்துள்ள மற்றொருவரின் நிலைத்திர்க்கு வேலைக்கு சென்ற ஊர் பெண்கள் தன் குடும்பத்தினரை தங்கிவிட்டார் என்று காவல் நிலையத்தில் அரசியல்  செல்வாக்கு கொண்ட நபர்களை கையில் வைத்து கொண்டு ஊர் அப்பாவி பெண்களின் மீது புகார் செய்தார். 
இதனை சற்றும் ஆராயாத காவல் துறையினர் ஊர் பெண்களை விசாரணை என்று கூறி காவல் நிலையம் அழைத்து சென்றனர். மேலும் 2 மணி அளவில் அவர்கள் குடும்பத்திற்கு அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று குறும் செய்தி வந்தது, அதனால் அனைவரின் குடும்பமும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஊர் மக்களின் மீது கோவம் கொண்ட வெறுப்பால்  அவர்கள் திண்டுக்கல் மருத்துவமனையில் தங்களுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று கூறி 15 நாட்களாக நாடகம் செய்துள்ளனர், திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகம் அவர்களின் உடல்நிலை நன்றாக உள்ளது என கூறியும் வீட்டிற்கு செல்லாமல் நடித்து வருகின்றனர். அரசியல் அழுத்தினால் மருத்துவமனையில் அவர்களை வெளியே அனுப்ப முடியவில்லை. சித்ரா தேவி என்ற பெண் வாய் பேசாத மாற்று திறனாளி எப்பத்தாள் , அந்த பெண்ணின் வார்த்தைக்கே காவல் துறையினர் மற்றும் நீதி மன்றம் முக்கியத்துவம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மேலும் பலரின் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல் துறையினரால் கைது  செய்யப்பட்ட 6 பெண்கள் 15 நாட்களாக சிறையில் அடைபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here